நாடு முழுவதும் கரோனா லாக்டவுன் காரணமாக பொது போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியுள்ளது. கடந்த மார்ச் 25ஆம் தேதிக்குப் பின் விமான சேவைகள் நாடு முழுவதும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
தற்போது கரோனா லாக்டவுனில் படிப்படியாக தளர்வுகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. இதையடுத்து விமான சேவைகள் விரைவில் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களை நிர்வகிக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா சில முக்கிய நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
அதன்படி அனைத்து பயணிகளும் தங்களது செல்போனில் ஆரோக்கிய சேது செயலியை பதிவிறக்கம் செய்திருக்க வேண்டும். முகக் கவசம், பாதுகாப்பு கவசங்கள் அவசியம் பயன்படுத்த வேண்டும். அனைவரும் கிருமி நாசினி எனப்படும் சானிடைசரை கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என நெறிமுறைகள் வகுத்துள்ளது.
வெளிநாட்டிலிருந்து இந்தியாவிற்கு சிறப்பு விமானம் மூலம் அழைத்து வரப்பட்ட பயணிகள் அனைவரும் 21 நாட்கள் கட்டாய தனிமைக்கு தற்போது உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க:வேளாண் சட்ட திருத்தங்களால் ஏற்படும் விளைவுகள் என்ன - விவசாய பொருளாதார நிபுணர் முனைவர் கோபிநாத் பேட்டி