தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சிவாஜி பூங்காவில் பதவியேற்பார் ஆதித்யா தாக்கரே...! - நம்பிக்கையில் சிவசேனா

மும்பை: இளம் தலைவர் ஆதித்ய தாக்கரே மகாராஷ்டிரா முதலமைச்சராக பதவியேற்கும் விழா சிவாஜி பூங்காவில் நடக்கும் என சிவசேனாவின் யுவசேனா (இளைஞர் படை) தலைவர் ராகுல் என். கனல் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

Aaditya thackeray will take oath as maha cm in shivaji park claims his confidante

By

Published : Nov 6, 2019, 10:48 AM IST

மகாராஷ்டிராவில் அடுத்து யார் ஆட்சி அமைப்பார் என்ற எதிர்பார்ப்பு நாடு முழுவதும் ஏற்பட்டுள்ளது. பாரதிய ஜனதாவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட சிவசேனா ஆட்சி அதிகாரத்தை (இரண்டரை ஆண்டுகள்) பகிர்ந்தளிக்க வேண்டும் என்று உறுதியாக இருப்பதே குழப்பத்துக்கு காரணம்.

இந்த நிலையில் சிவசேனா கட்சியின் இளைஞர் அணித் தலைவர் ராகுல் என். கனல் ட்விட்டரில், இளம் தலைவர் ஆதித்யா தாக்கரே, சிவாஜி பூங்காவில் முதலமைச்சராக பதவியேற்பார் என நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மேலும் அவர், “கடவுள் நினைக்கிறார்...! மகாராஷ்டிரா மக்களுக்கு சேவை செய்யும் பொறுப்பு எங்களுக்கு உள்ளது. நாங்கள் காத்திருக்கிறோம். அந்த வார்த்தைக்காக...!

சிவாஜி பூங்காவில் ஜூனியர் தாக்கரேவின் (ஆதித்யா தாக்கரே) குரல் ஒலிக்கும். பாலசாகேப்பின் (பால் தாக்கரே) கடவுளின் ஆசிர்வாதத்தில் அவரின் பேரன் பதவியேற்பார். கடவுள் உயர்ந்தவர்! ஜெய்ஹிந்த்! ஜெய் மகாராஷ்டிரா!” எனக் கூறியிருந்தார்.

29 வயதான ஆதித்யா தாக்கரே மும்பை வோர்லி தொகுதியில் போட்டியிட்டு 69 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவு செய்தார். மகாராஷ்டிராவில் தற்போதைய அரசின் பதவிக்காலம் வருகிற 8ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. அதற்கு முன்னதாக புதிய அரசு பதவியேற்க வேண்டும்.

இதையும் படிங்க: ஆர்.எஸ்.எஸ். உதவியை நாடிய சிவசேனா!

ABOUT THE AUTHOR

...view details