மகாராஷ்டிராவில் 288 சட்டப்பேரவைகளுக்கு வருகின்ற 21ஆம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கிறது. சட்டப்பேரவைப் பொதுத்தேர்தலுக்கு அம்மாநில அரசியல் கட்சிகள் பரப்புரை மேற்கொண்டுவருகின்றன.
வேட்டி கட்டி களமிறங்கிய அரசியல் வாரிசு! - சூடுபிடிக்கும் மகாராஷ்டிரா தேர்தல் களம் - தமிழர் பாரம்பரிய உடையான வேட்டி-சட்டை
மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் வோர்லி சட்டப்பேரவை தொகுதியில் பரப்புரை மேற்கொண்ட உத்தவ் தாக்கரே மகன் ஆதித்யா தாக்கரே தமிழர் பாரம்பரிய உடையான வேட்டி கட்டி வந்தார்.
அந்த வகையில் சிவசேனா இளைஞர் அணித் தலைவர் ஆதித்யா தாக்கரே வோர்லி தொகுதியில் பரப்புரை மேற்கொண்டபோது, தமிழர் பாரம்பரிய உடையான வேட்டி-சட்டை அணிந்துவந்தார். தமிழர்கள் அதிகமாக வாழும் வோர்லி சட்டப்பேரவைத் தொகுதியில் ஆதித்யா தாக்கரே போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.
காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் பிரதமர் நரேந்திர மோடி - சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையேயான சந்திப்பின் முதல்நாளில் பிரதமர் நரேந்திர மோடி வேட்டி-சட்டை அணிந்துவந்து தமிழர்கள் முறைப்படி சீன அதிபரை வரவேற்ற நிகழ்வை பெரும்பாலானோர் பாராட்டினர்.