உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் மெட்ராசி காலனி பகுதியைச் சேர்ந்த 22 வயது பெண் ஒருவரை அதே பகுதியில் வசிக்கும் மணிராம் (30) என்பவர் நீண்ட நாள்களாக ஒருதலையாக காதலித்துவந்ததாக கூறப்படுகிறது. அனால் அதற்கு அப்பெண் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் அடிக்கடி தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தி வந்ததுள்ளார்.
ஒருதலைக் காதலால் நிகழ்ந்த விபரீதம்: பெண்ணுக்கு கத்திக்குத்து! - ஒரு தலை காதல்
டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலம் மெட்ராசி காலனியில் உள்ள பெண்ணின் வீட்டு முன்பு இளைஞர் ஒருவர் அவரை கத்தியால் குத்தியுள்ளார்.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு 2 மணியளவில் பெண்ணின் வீட்டிக்கு சென்ற மணிராம் அப்பெண்ணை வெளியே வருமாறு கேட்டுள்ளார். அப்போது இருவருக்கு வாக்குவாதம் ஏற்பட்டு ஆத்திரமடைந்த மணிராம் தான் மறைத்துவைத்திருந்த கத்தியை எடுத்து அப்பெண்ணை சரமாரியாக குத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளார். பெண்ணின் அலறல் சத்தம் கேட்ட குடும்பத்தினர் உடனடியாக பெண்ணை மீட்டு பல்லூப்பூரில் உள்ள சினெர்ஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இந்நிலையில், பெண்ணை கத்தியால் குத்திய மணிராமை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.