ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சேர்ந்தவர் அஸ்விதா. இவர் ஹைதராபாத் அருகிலுள்ள சித்ராபுரி பகுதியில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். அப்போது அவருக்கு பாச்சுபள்ளி பகுதியைச் சேர்ந்த சந்தூ என்பவர் அறிமுகமானார்.
நாளடைவில் இந்த பழக்கம் ஒருவித நெருக்கத்தை ஏற்படுத்தியது. இந்த நெருக்கம் இருவரும் ஒரே அறையில் தங்கும் அளவிற்கு கொண்டு சென்றது. இருவரும் ஒரே அறையில் தங்கினர்.
ஆசை 60 நாள், மோகம் 30 நாள் என்பதற்கேற்ப ஒரு கட்டத்தில் இந்த அதீத நட்பு கசந்தது. சந்தூ திடீரென ஒருநாள் மாயமானார். தனது ஆண் நண்பரை காணாமல் தவித்த அஸ்விதா, பாச்சுப்பள்ளி காவல் நிலையம் சென்று தற்கொலை செய்யப் போவதாக கூறினார்.
தனது ஆண் நண்பர் சந்தூவிடம் ஒரு 10 நிமிடம் மட்டும் பேச சொல்லுங்கள் என அங்கிருந்த காவலர்களிடம் கெஞ்சினார். இது கல் நெஞ்சம் கொண்டோரையும் கரையச் செய்யும் வகையில் இருந்தது.