கர்நாடக மாநிலம் கல்புர்கி மாவட்டத்தைச் சேர்ந்த, ஜாபர் என்ற இளைஞர், தனது நண்பர்களுடன் குளத்தில் நீச்சல் அடித்துக் கொண்டிருந்தார். அப்போது, ஜாபர் தலையில், பலமாக அடிபட்டுள்ளது. இதனையடுத்து, உடனடியாக தண்ணீரிலிருந்து வெளியே வர முயன்றார். ஆனால், கரையை அடைய முடியாமல், கொஞ்சம் கொஞ்சமாக நீருக்குள் மூழ்கினார்.
குளத்தில் மூழ்கிய நண்பன்... விளையாடுவதாக நினைத்து காப்பாற்றாமல்விட்ட தோழர்கள்! - நண்பன் குளத்தில் முழ்குவதை வேடிக்கை பார்த்த சக தோழர்கள்
பெங்களூரு: நண்பன் குளத்தில் முழ்குவதை - விளையாட்டு என நினைத்து... சக நண்பர்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டும், அவர் மூழ்குவதை வீடியோ எடுத்துக்கொண்டும் இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதைப் பார்த்த சக நண்பர்கள், ஜாபர் விளையாட்டாக அப்படிச் செய்வதாக நினைத்து அவரை காப்பாற்றாமல் வேடிக்கை பார்த்துள்ளனர். மேலும், இச்சம்பவத்தைத் தனது செல்ஃபோனில் படம்பிடிக்கவும் செய்துள்ளனர். அதன் பிறகே, ஜாபர் நீரில் மூழ்கி இறந்தது தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர், உடலை மீட்டு உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: இரும்புக் கம்பியால் பெண் அடித்துக் கொலை!