தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தண்ணீரில் மூழ்கிய சிறுவனைக் காப்பாற்ற துடித்த தாய்: முயற்சி வீணான சோகம்! - மகனை காப்பாற்ற துடித்த தாயின் முயற்சி

ஹைதராபாத்: தெலங்கானா மாநில தலைநகரில் தண்ணீரில் மூழ்கிய மகனை காப்பாற்ற துடித்த தாயின் முயற்சி தோல்வியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தண்ணீரில் மூழ்கிய காப்பாற்ற துடித்த தாய்: முயற்சி வீண்ணான சோகம்!
தண்ணீரில் மூழ்கிய காப்பாற்ற துடித்த தாய்: முயற்சி வீண்ணான சோகம்!

By

Published : Dec 18, 2020, 11:52 AM IST

Updated : Dec 18, 2020, 12:01 PM IST

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள முஷப்பேட்டிற்கு வெங்கட்ராவ், பவானி தம்பதியினர் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்னதாக வேலை காரணமாக வந்துள்ளனர். கட்டட வேலை பார்க்கும் வெங்கட்ராவிற்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் நவீன் (8) மூன்றாம் வகுப்பு படித்துவந்துள்ளார்.

இந்நிலையில், கரோனா ஊரடங்கால் வீட்டிலிருந்த நவீன், தனது நண்பர்களுடன் அருகில் உள்ள சின்ன குளத்திற்கு குளிக்கச் சென்றுள்ளான். அப்போது குளத்தில் ஒரு பகுதியிலிருந்த பள்ளத்தில் நவீன் சிக்கியுள்ளார். இதனைப்பார்ந்த அவரின் நண்பர்கள் நவீன் வீட்டிற்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்தத் தகவல் அறிந்து குளத்திற்கு வந்த நவீனின் தாய் பவானி, அக்கம்பக்கத்தினர் உதவியுடன் தனது மகனை காப்பாற்றி கரைக்கு கொண்டுவந்துள்ளார். பின்னர் நவீனுக்கு முதலுதவி அளித்துள்ளனர்.

தண்ணீரில் மூழ்கிய சிறுவனை காப்பாற்ற துடித்த தாய்: முயற்சி வீணான சோகம்!

சிகிச்சை எதுவும் பயனளிக்காததால், கூக்கட்பள்ளி மருத்துவமனைக்கு கொண்டுசென்றுள்ளனர். அங்கு நவீனை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க...ஐ.நா. தரவரிசை அட்டவணை வெளியீடு: மனிதவள மேம்பாட்டில் இந்தியா பின்னடைவு

Last Updated : Dec 18, 2020, 12:01 PM IST

ABOUT THE AUTHOR

...view details