தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

காதலியைக் குத்திவிட்டு தற்கொலை செய்துகொண்ட கபடி வீரர் - தற்கொலை செய்துகொண்ட மாநில கபடி அணி வீரர்

கர்நாடகாவைச் சேர்ந்த கபடி வீரர் ஒருவர் காதலியைக் கத்தியால் குத்திவிட்டு, தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

a-tragedic-love-story-of-state-level-kabaddi-player-ends-with-the-suicide
a-tragedic-love-story-of-state-level-kabaddi-player-ends-with-the-suicide

By

Published : May 28, 2020, 4:35 PM IST

Updated : May 28, 2020, 4:48 PM IST

கர்நாடகாவின் மாண்டியா பகுதியைச் சேர்ந்தவர் கிரீஷ். கபடி வீரரான இவரும், அதே பகுதியைச் சேர்ந்த நித்யஸ்ரீயும் மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்த விவகாரம் வீட்டிற்குத் தெரியவர, அவர்கள் திருமணத்திற்குச் சம்மதிக்கவில்லை.

இதையடுத்து இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவுசெய்து வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இதையறிந்த உறவினர்கள் நித்யஸ்ரீ இருக்குமிடத்தை அறிந்து அங்கு சென்றுள்ளனர். அப்போது நித்யஸ்ரீயிடம், கிரீஷுடன் நிச்சயம் திருமணம் செய்துவைப்பதாக உறுதி கூறியுள்ளனர்.

இதனை நம்பி நித்யஸ்ரீ வீட்டிற்குத் திரும்பிச் செல்ல சம்மதித்துள்ளார். சில நாள்களுக்குப் பிறகு நித்யஸ்ரீயை மூளைச்சலவை செய்து வேறொருவருக்கு திருமணம் செய்துவைக்க பெண்ணின் குடும்பத்தினர் முடிவெடுத்துள்ளனர்.

இதற்கு நித்யஸ்ரீ எதிர்ப்பு தெரிவிக்காமல், வீட்டில் உள்ளவர்களின் செயல்களுக்குச் சம்மதம் தெரிவித்துள்ளார். இது கிரீஷுக்கு தெரியவர, வேறொருவரை தனது காதலி திருமணம் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாமல், நித்யஸ்ரீை கொலைசெய்ய திட்டமிட்டுள்ளார்.

இந்நிலையில், நித்யஸ்ரீ வீட்டிலிருந்து வெளியே வரும்போது கத்தியால் குத்திவிட்டு, அடுத்த சில மணி நேரங்களில் தானும் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டார். நித்யஸ்ரீ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைப் பெற்று வருகிறார். இச்சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர்.

இதையும் படிங்க:’இவன் இன்னும் உயிரோட இருக்கானா?’ - இறந்தவர் சுவாசித்ததால் வந்த குழப்பம்!

Last Updated : May 28, 2020, 4:48 PM IST

ABOUT THE AUTHOR

...view details