தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கர்நாடகாவில் 10 மாத குழந்தைக்கு கரோனா - A ten month old baby confirmed with corona positive in Mangaluru.

பெங்களூரு: கர்நாடகாவில் பத்து மாத குழந்தைக்கு கரோனா வைரஸ் நோய் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Corona
Corona

By

Published : Mar 27, 2020, 5:42 PM IST

கரோனா வைரஸ் நோய் இந்தியா முழுவதும் வேகமாக பரவிவருகிறது. அதிகபட்சமாக கேரளாவில் 137 பேருக்கும் மகாராஷ்டிராவில் 130 பேருக்கும் கர்நாடகாவில் 62 பேருக்கும் கரோனா வைரஸ் நோய் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே, தக்‌ஷின கன்னடா மாவட்டத்தில் 10 மாத குழந்தைக்கு கரோனா வைரஸ் நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. குழந்தையோ அக்குழந்தையின் குடும்பத்தாரோ வெளிநாடு சென்றதற்கான விவரங்கள் ஏதும் இல்லை. ஆனால், கேரளா சென்றிருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தக்‌ஷின கன்னடா மாவட்ட ஆட்சியர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

மருத்துவ அறிக்கை

காய்ச்சல், இருமல் ஆகியவற்றால் அவதிக்குள்ளான அக்குழந்தை மார்ச் 23ஆம் தேதி மங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். குழந்தையின் உடல்நிலை சீராக உள்ளது எனவும் குடும்ப உறுப்பினர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: ’ யாருக்கும் கரோனா பாதிப்பு கண்டறியப்படவில்லை'

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details