பெங்களூரு: கரோனா ஊரடங்கிற்கு முன்பு உறைவிடப்பள்ளியில் படித்துவந்த பவன் கன்டி (8), என்ற மாணவர் நெட்வொர்க் பிரச்னையால் ஆன்லைன் கல்வியைப் பெறமுடியாமல் இருந்தது. இதைத்தொடர்ந்து, தனது தாயிடம் தான் படிப்பதற்கு ஏதாவது செய்ய கேட்டுள்ளார். மகனின் கல்வி கற்கும் ஆர்வத்தைப் புரிந்துகொண்ட தாய், பவனின் ஆசிரியர் அனுசுயா சஜ்ஜனின் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
ஆசிரியரும் பவனுக்கு ஒரு மாதத்திற்கான வீட்டுப்பாடத்தை கொடுத்துள்ளார். ஒரு மாதத்தில் வீட்டுப்பாடத்தை முடித்த பவன், தனது தாயுடன் தனது ஆசிரியர் வீட்டிற்கு 35 கி.மீ .பயணம் செய்து சென்றுள்ளார்.