இரண்டு தலை, ஆறு கால்கள் கொண்ட விசித்திர கன்று - ஆறு கால்களுடன் கன்றுக்குட்டி
சிர்சி (கர்நாடகா): சித்தபுராவில் இரண்டு தலை, ஆறு கால்கள் கொண்ட விசித்திரமான கன்று அறுவை சிகிச்சை மூலம் பசுவின் வயிற்றிலிருந்து அகற்றப்பட்டது.
கர்நாடகா மாநிலம் உத்தர கன்னட மாவட்டத்தின் சித்தபுரா தாலுகா தலகுப்பா கிராமத்தைச் சேர்ந்த அனந்த்குமார் என்பவர் தனது சினை பசுவை பிரசவத்திற்காக சித்தபுரா கால்நடை மருத்துவமனைக்கு கொண்டுவந்தார்.
அங்கு கால்நடை வளர்ப்புத் துறையின் உதவி இயக்குநர் டாக்டர் ஸ்ரேயாஸ் ராஜ் இரண்டு மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து பசுவின் வயிற்றிலிருந்த இரண்டு தலைகள், ஆறு கால்களைக் கொண்ட கன்றை வெளிக்கொண்டு வந்தார். ஆனால் கன்று பசுவின் வயிற்றிலேயே இறந்துவிட்டது.
இந்த விசித்திரமான கன்றை காண்பதற்கு அப்பகுதி மக்கள் கூடினர். அறுவைச் சிகிச்சைக்குப் பின்பும் பசுவின் உயிரைக் காப்பாற்றிய டாக்டருக்குப் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.