சாதாரண நாள்களிலேயே யாரும் அவர்களை கண்டுகொள்ள மாட்டார்கள். ஒருவரை ஒருவர் சந்தேக கண்களுடன் பார்த்து கொள்ளும் இம்மாதிரியான பெருந்தொற்று காலத்தில், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் மீது யார் கவனம் செலுத்துவார்கள். அவர்களின் தேவைகளை யார் பூர்த்தி செய்வார்கள்.
எது சரி எது தவறு என்பது குறித்து அறியாமல் தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்பது பற்றி தெரியாமல் துன்ப மனநிலையுடன் சாலைகளில் சுற்றித்திரிபவர்களுக்கு காவியா என்பவர் உதவி செய்துவருகிறார். ஹைதராபாத் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு செல்லும் காவியா மற்றும் அவரது குழுவினர் மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உணவு, உடை ஆகியவற்றை வழங்கிவருகின்றனர். இம்மாதிரியான இக்கட்டான காலகட்டத்தில், அவர்களை கடவுளின் தூதர்களாக மக்கள் பார்க்கின்றனர்.
முகலாயர்கள் கட்டி எழுப்பிய அழகிய கட்டுமானங்களை கொண்ட ஹைதராபாத்தில்தான் பல அசுத்தமான இடங்களும் உள்ளன. பல நட்சத்திரங்களின் வீடுகள் உள்ள அதே ஹைதராபாத்தில்தான் யாரும் கவனம் செலுத்த விரும்பாத படிப்பறிவு இல்லாத, ஒடுக்கப்பட்ட, கைவிடப்பட்ட மக்களின் வீடுகளும் உள்ளன.
இப்படிப்பட்ட மக்களின் பசியைப் போக்கும் விதமாக காவியா மற்றும் அவரது குழுவினர் பல்வேறு விதமான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றனர். லும்பினி பூங்கா, கோட்டி அரசு மருத்துவமனை, தலைமைச் செயலகம் போன்ற இடங்களில்தான் மக்கள் அதிகம் கூடுகின்றனர்.