புதுச்சேரியை அருகே சூரமங்கலம் கிராமத்தில் சாலையில் சென்றுகொண்டிருந்த ஒருவரை வெறிநாய் ஒன்று கடித்துள்ளது. இதனையடுத்து அங்கிருந்தவர்கள் அந்த நாயை விரட்ட முற்பட்டபோது, 25-க்கும் மேற்பட்டோரை அந்த நாய் துரத்தித் துரத்தி கடிக்கத் தொடங்கியது. இப்படி பலரைக் கடித்து அந்த நாய் நெட்டப்பாக்கம் கிராமத்திற்குச் சென்று அங்கும் சிலரைக் கடித்துள்ளது.
25 பேரை கடித்துக் குதறிய வெறிநாய்!
புதுச்சேரி: சூரமங்கலம் பகுதியில் 25-க்கும் மேற்பட்டவர்களை வெறிநாய் ஒன்று கடித்துக் குதறிய சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
வெறிநாய்
நாய் கடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அருகிலிருந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் புதுச்சேரியில் உள்ள அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகச் சென்றனர். 25-க்கும் மேற்பட்டவர்களை வெறிநாய் கடித்துக் குதறிய சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.