பணப் பரிவர்த்தனையை கண்காணிக்க நிதி, வெளியுறவு அமலாக்கம் உள்பட ஐந்து அமைச்சகங்களைச் சேர்ந்த 19 பேர் கொண்ட குழு இதற்காக அமைக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.
சட்டவிரோத பரிவர்த்தனையை கண்காணிக்க தனிக் குழு - மத்திய அரசு - Vise-like grip For illegal transactions
டெல்லி: நாடு முழுவதும் சட்டவிரோத பண பரிவர்த்தனையை கண்காணித்து தடுப்பதற்காக உயர்நிலைக் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.
சட்டவிரோத பரிவர்த்தணை
இதில் உள்ளவர்கள் பயங்கரவாதத்திற்கு பயன்படுத்தப்படும் நிதி, சட்டவிரோத பணப் பரிமாற்றத்தை தடுப்பது தொடர்பான கொள்கைகளை அமல்படுத்துவது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருவாய் செயலர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இக்குழுவில் நிதி, பொருளாதார விவகாரம், கார்ப்பரேட் விவகாரம், வெளியுறவுத் துறைகளைச் சேர்ந்தவர்கள் உறுப்பினராக இருப்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.