உத்தரகாண்ட் மாநிலம் சாமோலி மாவட்டத்தில் ரூபாய்க்கு ஒரு நாப்கின் வழங்கும் இயந்திரத்தை அம்மாவட்டத்தின் நந்த்பிரயாக் நகர் பஞ்சாயத்துத் தலைவர் டாக்டர் ஹிமானி வைஷ்ணவ் திறந்து வைத்தார்.
உத்தரகாண்டில் ரூபாய்க்கு ஒரு நாப்கின்! - நாப்கின்
உத்தரகாண்ட்: சாமோலி மாவட்டத்தில் ரூபாய்க்கு ஒரு நாப்கின் வழங்கும் இயந்திரம் பொறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து உள்ளூர் பெண் ஒருவர் கூறுகையில், ரூபாய்க்கு ஒரு நாப்கின் கிடைப்பது மிகவும் உதவியாக உள்ளது. இதை நாங்களே இங்கே எடுத்துக்கொள்ள முடியும், இனி கடைக்குச் சென்று கடைக்காரர்களிடம் வாங்கத் தேவையில்லை என்றார்.
இந்தத் திட்டத்திற்கு பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதுகுறித்து ஹிமானி வைஷ்ணவ் கூறுகையில், பெண்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நினைத்து இந்த இயந்திரத்தை பொறுத்தினேன். இனி அவர்கள் தயக்கத்துடன் கடைகளில் சென்று வாங்கத் தேவையில்லை என தெரிவித்தார்.