தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'2020 பட்ஜெட் விவேகமானது' - பொருளாதார நிபுணர் குருசரண் தாஸ் கருத்து - Gurcharan Das

வர்த்தக பாதுகாப்புச் சீர்திருத்தங்கள் குறித்து அறிவிக்கைகள் வெளியாகாததும் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க எந்த யோசனைகள் இல்லாததும்தான் எனக்கு இந்த பட்ஜெட்டில் உள்ள மிகப் பெரிய வருத்தமாகும். சமீபத்திய பொருளாதார ஆய்வு ஏற்றுமதிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இந்த பட்ஜெட்டில் பெரும் எதிர்பார்ப்புகளைக் கொண்டிருந்தது.

இது பொறுப்பான பட்ஜெட்- பொருளாதார நிபுணர் குருசரண் தாஸ் கருத்து
இது பொறுப்பான பட்ஜெட்- பொருளாதார நிபுணர் குருசரண் தாஸ் கருத்து

By

Published : Feb 24, 2020, 8:21 AM IST

2020ஆம் ஆண்டு பட்ஜெட் தாக்கல் குறித்து பொருளாதார குருசரண் தாஸ் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறிய கருத்துக்களின் விரிவான தொகுப்பு. சமீபத்தில், 2020ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இது பொறுப்பான பட்ஜெட் என்றபோதிலும், உடனடியாக இது பொருளாதார மந்தநிலையைச் சீர் செய்யாது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்தியா பொருளாதாரத்தில் உள்ள நெருக்கடியை ஒப்புக்கொள்ள வேண்டும். பின்னர், அதிலிருந்து வெளிவருவதற்கான திட்டங்களைத் தீட்ட வேண்டும்.பொருளாதார மந்தநிலையைத் தீர்க்க இரு வழிகள் உள்ளன. ஒன்று நுகர்வோர் வழியாக, மற்றோன்று முதலீடு வழியாக.

சமீபத்திய பட்ஜெட் இரண்டாவது வழியைத் தேர்வு செய்துள்ளது. இதுதான் சரியான முறை. முதல் வழியான நுகர்வில் வங்கிகள் வழியாக மக்கள் கையில் பணப்புழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். அந்தப் பணத்தைப் பொருள்கள் வாங்குவதில் மக்கள் செலவழிப்பார்கள். இது தேவையை அதிகரித்து தொழிற்சாலைகள் நல்ல முறையில் இயங்க வழிவகுக்கும்; வேலைவாய்ப்பை உருவாக்கும். நல்ல முறையில் செலவிடப்படும் பணம் பொருளாதார வளர்ச்சிக்கு உதவிக்கரமாக அமையும்.

இரண்டாவது வழியான முதலீட்டை எடுத்துக்கொண்டால், இதுவும் வேலைவாய்ப்பைக் கொண்டுவரும். வேலைவாய்ப்பு மக்கள் கையில் பணப்புழக்கத்தை அதிகரிக்கும். மக்கள் செலவுசெய்து பொருள்களை வாங்க தொடங்குவார்கள். தொழிற்சாலைகள் நல்ல முறையில் இயங்கினால் வேலைவாய்ப்பு பெருகும். இதுவும் பொருளாதார மந்தநிலையைச் சீர்செய்ய உதவும். சாலைத் திட்டங்கள், நீர் வழிப்பாதைகள், குடிநீர் குழாய்கள் அமைத்தல், வீட்டுவசதி திட்டம், மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த இந்த பட்ஜெட்டில் ரூ. 103 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

வீணாகிப்போன வாய்ப்பு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார மந்தநிலையை ஒப்புக்கொள்வது அவருக்கே நன்மை செய்துகொண்டது போலாகும். அதேபோல், பொருளாதார மந்தநிலையிலிருந்து மீண்டு வருவதற்கு வகுத்துள்ள திட்டங்களையும் விளக்க வேண்டும். பல நல்ல வேலைவாய்ப்புகளை உருவாக்கும் முன்னெடுக்கும் பட்ஜெட்டை கொடுத்துள்ளார்.

இந்த முயற்சியால் உருவாகும் நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளின் கணக்கீட்டையும் காட்டியிருந்தால் இன்னும் ஊக்கம் அடைந்திருப்போம். சீர்திருத்தங்களை மட்டுமே அறிவிப்பது பட்ஜெட் அல்ல. அந்த வகையில், நிர்மலா சீதாராமன் தனக்கு கிடைத்த வாய்ப்பை வீணடித்துள்ளார். ஒரு நெருக்கடி நிலையில் கொண்டுவரப்படும் சீர்திருத்தங்கள் சரியான முறையில் வேலை செய்யும். சீர்திருத்தங்கள் வழியாக ஏற்படும் குறுகிய கால இழப்புகளை மக்கள் ஏற்றுக்கொள்வார்கள்.

உதாரணத்துக்கு, விவசாயிகளில் நிலங்களை நீண்ட கால குத்தகைக்கு எடுத்து விவசாயம் மேற்கொள்வது. வேளாண் துறையில் அவர் கொண்டுவந்துள்ள இந்தச் சீர்திருத்தம் வியக்கத்தகும் வகையில் வேளாண் உற்பத்தியைப் பெருக்கும். மத்திய அரசு இந்த விஷயத்தில் அதிக முக்கியத்துவம் கொடுத்தாலும், மாநில அரசுகள் இந்தச் சீர்திருத்தத்தில் மெத்தனம் காட்டிவருகின்றன. பாஜக நம்பும் சீர்திருத்தங்களில் அதாவது நிலம் மற்றும் தொழிலாளர்கள் விஷயங்களில் சீர்திருத்தம் அறிவிக்கப்பட்டிருந்தால் நாட்டு மக்கள் இன்னும் ஊக்கமடைந்திருப்பார்கள்.

வர்த்தக பாதுகாப்புச் சீர்திருத்தங்கள் குறித்து அறிவிக்கைகள் வெளியாகாததும் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க எந்த யோசனைகள் இல்லாததும்தான் எனக்கு இந்த பட்ஜெட்டில் உள்ள மிகப் பெரிய வருத்தமாகும். சமீபத்திய பொருளாதார ஆய்வு ஏற்றுமதிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இந்த பட்ஜெட்டில் பெரும் எதிர்பார்ப்புகளைக் கொண்டிருந்தது.

உலகளாவிய வர்த்தகத்துக்கு இணையாக இந்தியாவும் வளரும் என்ற நம்பிக்கையை அளித்தது. அதோடு, 'மேக் இன் இந்தியா' திட்டம், ’அசெம்பிள்ட் இன் இந்தியா' என்று மறுபெயரிடப்பட வேண்டும். சீனாவில் ஏற்பட்டுள்ள பிரச்னைகள் காரணமாக, சர்வதேச அளவில் வர்த்தக முறைகள் திருத்தியமைக்கப்படவுள்ள நிலையில், இந்தியாவும் மாற்றத்தை மேற்கொள்ள இது சரியான நேரம். இந்த பட்ஜெட்டில் பல பொருள்களின் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டதற்கு, மாறாக பல பொருள்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

உள்நாட்டுச் சந்தையை வலுப்படுத்தாமல் எந்த நாடும் பொருளாதார ரீதியாக வளர்ச்சி கண்டதில்லை என்பது வரலாறு. இந்த அரசு பொருளாதாரத்தைக் கையாள்வதில் தோல்வியடைந்திருந்தாலும், ஏற்றுமதி சிறப்பான முறையில்தான் இருக்கிறது. ஆனால், நல்ல வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் தோல்வியைச் சந்தித்துள்ளது. கடந்த 7 ஆண்டுகளில் இந்தியாவின் ஏற்றுமதி தேக்கநிலையில்தான் உள்ளது. இதே காலகட்டத்தில் வியட்நாம் நாட்டின் ஏற்றுமதி 300 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

பட்ஜெட் 2020 உடனடியாக நல்ல பலனைத் தராவிட்டாலும், இது ஒரு விவேகமான பட்ஜெட் என்றே சொல்லலாம். பெரியளவில் நிதித் தூண்டுதலை ஏற்படுத்தும் வகையில் பெரிய மாற்றம் இல்லை. சவால்களை எடுப்பதில்லை என்பதில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விவேகமான முடிவை எடுத்துள்ளார். 2008ஆம் ஆண்டு ஏற்பட்ட சர்வதேச நிதி நெருக்கடிக்குப் பிறகு, நாம் எடுத்த ரிஸ்க்குகள் ஆபத்தான மற்றும் மோசமான பின்விளைவுகளையே ஏற்படுத்தின.

ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தியை 10 சதவிகிதம் அதிகரிக்கும் வகையில் இந்த பட்ஜெட்டில் செலவினங்கள் போடப்பட்டுள்ளன. நிதி அமைச்சரின் விவேகமான முடிவுகளில் இதுவும் ஒன்றாகும். முடிவாக இந்த பட்ஜெட்டில் என் பார்வையில் சாதகமான அம்சங்களைப் பட்டியலிடுகிறேன்.

1. மனிதக் கழிவுகள், சாக்கடைகளை அகற்ற மனிதர்களைப் பயன்படுத்த மாட்டோம் என்பதற்கு உத்தரவாதம் அளித்திருப்பது.

2. வர்த்தகப் பிரிவினர் அரசின் மீது நம்பிக்கை பெறும் வகையில், குற்றச்செயல்களைக் குறைக்கும் வகையில் கம்பெனி சட்டத்தில் சீர்திருத்தம் கொண்டு வந்தது.

3. வரி செலுத்துவோர் தவறுகள் செய்திருந்தால் தண்டிக்கப்பட மாட்டார்கள் என்று உறுதியளித்திருப்பது.

இந்த விஷயங்களில் மோடி அரசு வெற்றி பெற்றால் அந்த வெற்றியை சிறியதாக கருதிவிட முடியாது.

ABOUT THE AUTHOR

...view details