தமிழ்நாடு

tamil nadu

கள்ளநோட்டு அடிப்பதில் கில்லாடியான அசாமிலுள்ள ஓர் மாவட்டம்: 24 பேரைக் கைது செய்த காவல்துறை!

By

Published : Sep 18, 2019, 7:08 PM IST

திஸ்பூர்: லக்கிம்பூர் மாவட்டத்தில் போலி தங்கம், கள்ளநோட்டுக்கள் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டு, அது தொடர்பாக 24 பேரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

போலி தங்கம்

அசாம் மாநிலம் லக்கிம்பூர் மாவட்டத்தில் தங்கம் மற்றும் கள்ளநோட்டுப்புழக்கம் அதிகம் நிறைந்த பகுதியாகக் கருதப்படுகிறது. அங்கு பணப்புழக்கம், பணம் கைமாறுதல் இவையெல்லாம் மக்கள் நடமாட்டம் அதிகம் இல்லாத பகுதிகளிலேயே நடைபெறும். பெரிதும் மக்களுக்கு தெரியாத மர்மமான இடத்திலேயே இந்த கள்ளநோட்டு தயாரிப்புகள் நடைபெறும். இது தொடர்பாக காவல்துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.

போலி தங்கச் சிலை

இதையடுத்து பங்கல்மாரா பகுதியானது கள்ளநோட்டுக்கள் அதிகம் தயாரிக்கும் இடமாக உருமாறியது. ஒருவர் ரூ.50 ஆயிரம் பணத்தை ரொக்கமாக கொடுத்தால் ரூ.70 ஆயிரம் கள்ளநோட்டாக திரும்பிக் கிடைக்கப்பெறும். இதேபோல் கள்ளநோட்டுப் புழக்கம் தொடர்ச்சியாக நடைபெற்றது. மேலும் போலி தங்கத்தினால் செய்யப்பட்ட சிலை, போலி தங்கம், போலி இயந்திரம், கள்ளநோட்டுக்கள் ஆகியவை அதிகமாக அப்பகுதியில் தயாரிக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை 24 பேரைக் காவல்துறை கைது செய்துள்ளது. இதற்குப் பின்னால் இருக்கும் முக்கியப்புள்ளியை காவல்துறையினர் தேடி வருகின்றனர். மேலும் இந்தத் தொழிலுக்காக இவர்களை பின்னால் இருந்து இயக்குபவர் யார் என்று காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.

புழக்கத்துக்கு வந்த கள்ளநோட்டுக்கள்!

ABOUT THE AUTHOR

...view details