தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தெலங்கானாவில் சொத்து தகராறு காரணமாக 3 வயது குழந்தை கொலை! - property dispute murder

ஹைதராபாத்: அனந்தபூர் மாவட்டத்தில் சொத்து தகராறு காரணமாக 3 வயது குழந்தை கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

child killed over property dispute
child killed over property dispute

By

Published : Oct 8, 2020, 9:34 PM IST

தெலங்கானா மாநிலம் அனந்தபூர் மாவட்டம் மார்டடூவைச் சேர்ந்த தினேஷ் என்பவர் தனது மகன்கள் மோக்ஷக்னா (3), சஷிதர் (4) ஆகிய இருவரையும் காணவில்லை என அப்பகுதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்தப் புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். அதில், "தினேஷ் மற்றும் அவரது சகோதரர் இருவருக்கும் சொத்துத் தகராறு இருந்துவந்துள்ளது.

அதனால் அவர் தனது மருமகன் ராமு என்பவரின் உதவியுடன் இரண்டு குழந்தைகளையும் கடத்தி சின்னா முஷ்டூரு பகுதிக்கு கொண்டுச் சென்று மோக்ஷக்னாவை கால்வாயிலும், சஷிதரை முள் புதரிலும் வீசிவிட்டு வந்துள்ளார்" என்பது தெரியவந்தது.

அதையடுத்து மோக்ஷக்னா நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். சஷிதர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துமனையில் அனுமத்திக்கப்பட்டுள்ளார். மேலும் ராமு தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க:திருமணத்தை மீறிய உறவு: மனைவி கண்முன்னே கணவனை துவைத்தெடுத்த காதலன்!

ABOUT THE AUTHOR

...view details