தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'உச்ச நீதிமன்றத்திலிருந்து என்னை பிரிக்க முடியாது'.. இறுதிப்பணி நாளில் உருகிய கோகாய் - உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ்.ஏ. போப்டே

டெல்லி: உச்ச நீதிமன்றத்திலிருந்து ஒரு நாளும் தன்னை பிரிக்க முடியாது என தனது இறுதி பணி நாளில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

Ranjan Gogoi

By

Published : Nov 16, 2019, 2:39 AM IST

உச்சநீதிமன்ற நீதிபதியாகப் பதவிவகித்து வந்த ரஞ்சன் கோகாயின் பதவிக்காலம் நவம்பர் 17ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. நீதிமன்றத்தின் இறுதி பணி நாளான இன்று அவருக்கு பிரிவு உபசார விழா உச்சநீதிமன்றத்தில் அளிக்கப்பட்டது.

இவ்விழாவில் நிறைவுறையாற்றிய ரஞ்சன் கோகாய், நாட்டின் மிக மதிப்பு மிக்க அமைப்பான உச்ச நீதிமன்றத்தில் இன்று முதல் நேரடி பங்களிப்பு என்னால் அளிக்க முடியாது. இருப்பினும் உச்ச நீதிமன்றத்தின் நலனை விரும்பும் நான் பிரிக்கமுடியாத அம்சமாக இருக்கவே நான் விரும்புகிறேன்.

40 வருடங்களாக வழக்கறிஞராகவும் நீதிபதியாகவும் பணியாற்றிய நான் நாட்டின் நீதித்துறையின் செயல்பாட்டை அருகிலிருந்து பார்த்தது எனக்கு கிடைத்த பேறு எனத் தெரிவித்தார்.

2018ஆம் ஆண்டு அக்டோபர் 8ஆம் தேதியன்று தலைமை நீதிபதியாகப் பதவியேற்ற ரஞ்சன் கோகாய் பணியின் இறுதி நாளில் ராஜ்கோட்டில் தனது மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் மரியாதையை செலுத்தினார். ரஞ்சன் கோகாய்-க்கு பதவி நிறைவடைந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக எஸ்.ஏ. போப்டே செயல்படவுள்ளார்.

இதையும் படிங்க: பொருளாதார நிலை குறித்து மத்திய இணையமைச்சரின் பகீர் விளக்கம்

ABOUT THE AUTHOR

...view details