மத்திய ரிசர்வ் காவல் படையின் (CRPF) புதிய இயக்குநர் ஜெனரலாக (Director-General) மூத்த ஐபிஎஸ் அலுவலர் ஏ.பி. மகேஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 1984ஆம் ஆண்டு உத்தரப் பிரதேச கேடரிலிருந்து ஐபிஎஸ் அலுவலராக தேர்ச்சி அடைந்திருந்தார்.
இவர் தற்போது மத்திய உள்துறை அமைச்சகத்தின் சிறப்புச் செயலராக (உள்நாட்டுப் பாதுகாப்பு) உள்ளார். முன்னதாக, மத்திய ரிசர்வ் காவல் படையின் முன்னாள் இயக்குநர் ஜெனரல் ஆர்.ஆர்.பட்நாகர் டிசம்பர் 31ஆம் தேதி ஓய்வு பெற்றதையடுத்து சிஆர்பிஎஃப் இயக்குநர் ஜெனரல் பதவி காலியாக உள்ளது.