கடந்த மாதம் மும்பையிலிருந்து குண்டபுரா வந்த சஹாப் சிங் எனும் நபரை, சுகாதாரத் துறை தனிமைப்படுத்திக்கொள்ள சொன்னது. ஆனால், அவர் விதியினை மீறி நகர் முழுவதும் சுற்றித் திரிந்துள்ளார். இதையறிந்த குண்டபுரா காவல்துறையினர் அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கரோனா சூழலில் காவலர்களுக்கு டார்ச்சர் - யார் இந்த சஹாப் சிங்? - சஹாப் சிங்
பெங்களூரு: உடுப்பி மாவட்டத்தில் 163 முறை கரோனா தடுப்பு விதியை மீறியவர் மீது இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கிளாஸ் & பிளைவுட் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள சஹாப் சிங், ஜூன் 29ஆம் குண்டபுராவுக்கு வருகை தந்தார். அவரை பரிசோதித்த சுகாதாரத் துறை, ஜூலை 13ஆம் தேதி தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தியது. ஆனால் அவரோ கரோனா தடுப்பு விதியை பின்பற்றாமல் நகர் முழுவதும் சுற்றித் திரிந்திருக்கிறார், உடுப்பியில் உள்ள பல ஹோட்டல்களுக்கு சென்றுள்ளார்.
தனிமைப்படுத்துதல் காலத்தில் மட்டும் அவர் 163 முறை வீட்டை விட்டு வெளியே சென்றிருக்கிறார். இவரது மொபைலில் உள்ள ஜிபிஎஸ் ட்ரேக்கர் மூலமாக காவலர்களுக்கு இத்தகவல் கிடைத்துள்ளது. எனவே கரோனா விதியை மீறிய சஹாப் சிங் மீது இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 269 மற்றும் 270 ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சஹாப் சிங் குறித்து காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.