கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் குட்டிபுரம் பகுதியைச் சேர்ந்த ஹபீஸ் மனூரில் (Hafiz Manooril) என்ற இளைஞரும் கல்லூரி பேராசிரியையும் காதலித்து வந்தனர். இருவரும் அவ்வப்போது தனிமையில் சந்தித்து தங்களின் காதலை வளர்த்து வந்தனர்.
இந்த நிலையில் திருமணம் செய்துக் கொள்வதாக ஆசை வார்த்தை கூறிய ஹபீஸ் மனூரில், கல்லூரி பேராசிரியையுடன் இன்பம் அனுபவித்துள்ளார். ஆனால் நாட்கள் செல்லச்செல்ல அவரை திருமணம் செய்துக் கொள்ளவில்லை.
மாறான உனது ஆபாச படங்கள் மற்றும் காணொலி காட்சிகள் என்னிடம் உள்ளது. என் பேச்சை நீ மீறும் பட்சத்தில் நான் இந்த புகைப்படங்கள் மற்றும் காணொலி காட்சிகளை இணையத்தில் கசிய விட்டு விடுவேன் என்று மிரட்டியுள்ளார்.
இதனால் அதிர்ச்சிக்குள்ளான அந்த பேராசிரியை நடந்த சம்பவம் குறித்து யாரிடமும் தெரிவிக்காமல் ரகசியம் காத்து வந்தார். எனினும் ஹபீஸ் மனூரிலின் சேட்டை நாளுக்கு நாள் அதிகமானது. ஒரு கட்டத்தில் பேராசிரியை குறித்த புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றினார்.
ஹபீஸ் மனூரில் மீதான புகார் மனு தொடர்ந்து கேரளாவில் இருந்து வெளியேறி வெளிநாட்டுக்கு தப்பித்துச் சென்று விட்டார். இதுதொடர்பாக கல்லூரி பேராசிரியை குட்டிபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். எனினும் இந்த புகாரின் பேரில் காவலர்கள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதுதொடர்பாக பேசிய கல்லூரி பேராசிரியை, என் அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் காணொலிக் காட்சிகளை அவர் (ஹபீஸ் மனூரில் Hafiz Manooril) இணையத்தில் பதிவேற்றியுள்ளார். இதுவே போதுமான ஆதாரங்கள். ஆனாலும் காவல்துறை சார்பில் எந்த நடவடிக்கையும் இதுவரை இல்லை என குற்றஞ்சாட்டினார்.
இதையும் படிங்க: கோவை சிறுமி வழக்கு: குற்றவாளிக்கு தூக்கு தண்டனையை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்!