தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

விபத்தில் லாரி ஓட்டுநரின் நெஞ்சில் பாய்ந்த கம்பி: அறுவை சிகிச்சை மூலம் அகற்றிய மருத்துவர்கள் - iron rod went into the chest of lorry driver

பெங்களூரு: ராய்ச்சூர் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் லாரி ஓட்டுநரின் உடலுக்குள் சிக்கிய ஐந்து அடி நீளமுள்ள இரும்புக் கம்பியை மருத்துவர்கள் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மூலம் அகற்றியுள்ளனர்.

iron rod went into the chest of lorry driver
lorry driver

By

Published : Dec 16, 2019, 10:59 PM IST

கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் மாவட்டத்தில் உள்ள குர்மத்கல் நகர் அருகே முன்னே சென்றுகொண்டிருந்த பேருந்தின் மீது லாரி ஒன்று மோதியது. இதில் சாலையில் கவிழ்ந்த லாரி விபத்துக்குள்ளானது.

விபத்தில் சேதமடைந்த லாரி, பேருந்து

இந்த விபத்தில் விஜயவாடாவைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் கோட்டேஷ்வர் ராவின் நெஞ்சில் பாய்ந்த ஐந்து அடி நீளமுள்ள கம்பியானது அவரது உடலை துளைத்து முதுகின்பின் வெளியே வந்தது. உடலின் இரண்டு பக்கமும் வெளியில் இரண்டு அடி வரை அந்தக் கம்பி தெரிந்தவாறு இருந்தது. இதனால் உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் ராய்ச்சூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

விபத்தில் சிக்கிய லாரி ஓட்டுநருக்கு நடைபெற்ற அறுவை சிகிச்சை

அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். பின்னர் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு கோட்டேஷ்வர் ராவின் உடலில் பாய்ந்திருந்த கம்பியை மருத்துவர்கள் வெற்றிகரமாக வெளியில் எடுத்தனர்.

இதுபோன்ற மோசமான விபத்துகளில் சிக்கும் மனிதர்கள் உயிருடன் காப்பாற்றும் நிகழ்வுகள் ஒரு சில இடங்களில் மட்டுமே நடைபெறும். தற்போது இந்த லாரி ஓட்டுநர் அந்த வகையில் உயிர் பிழைத்துள்ளார்.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details