தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

குழந்தையை திருட முயன்ற நபர் கைது - பெற்றோர் உஷாரானதால் அசம்பாவிதம் தவிர்ப்பு! - திருட முயற்சித்த நபர் கைது

லுதியானா: பெற்றோருடன் உறங்கிக்கொண்டிருந்த நான்கு வயது பெண் குழந்தையை திருட முயற்சித்த நபரை காவல் துறையினர் கைது செய்தனர்.

a-man-attempts-to-steal-a-4-year-old-child-while-she-was-sleeping-with-her-family

By

Published : Sep 18, 2019, 1:23 PM IST

பஞ்சாப் மாநிலம் லுதியானா அருகே வீட்டின் வெளிப்புறம் பெற்றோருடன் நான்கு வயது பெண் குழந்தை ஒன்று உறங்கிக்கொண்டிருந்தது. அப்போது அவ்வழியாக சைக்கிள் ரிக்‌ஷாவில் வந்த நபர் ஒருவர் அக்குழந்தையை அங்கிருந்து திருடிச் செல்ல முயன்றுள்ளார்.

ஏதோ சத்தம் கேட்டதை அடுத்து திடுக்கிட்டு எழுந்த பெற்றோர், குழந்தையை அந்நபர் திருட முயன்றதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். தொடர்ந்து பெற்றோர் கூச்சலிட்டதை அடுத்து அக்கம்பக்கத்தினர் சேர்ந்து தப்பியோட முயன்ற அந்த நபரை சுற்றிவளைத்தனர்.

குழந்தையை திருட முயன்ற நபர்

தொடர்ந்து லுதியானா காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து அந்த நபரை கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க...

மருமகளுக்கு மறு திருமணம் செய்துவைத்த மாமனார்! - ஒடிசாவில் நெகிழ்ச்சி சம்பவம்

ABOUT THE AUTHOR

...view details