தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கடுமையான விதிமுறைகளின்படி தயாரிக்கப்பட்ட வாக்காளர் பட்டியல் தேவை! - மக்களவைத் தேர்தல்

22 மாநிலங்கள், மத்தியத் தேர்தல் ஆணையம் தயாரிக்கும் வாக்காளர் பட்டியலை நம்பியே உள்ளன. அதே நேரத்தில் உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், ஒடிசா, அசாம், மத்தியப் பிரதேசம், கேரளா, அருணாசலப் பிரதேசம், நாகலாந்து மாநில தேர்தல் ஆணையங்கள் தங்களுக்கு என தனித்தன்மையை வெளிப்படுத்தும் வகையில் தனிப்பட்ட வாக்காளர் பட்டியலைத் தயாரிக்கின்றன.

Voters
Voters

By

Published : Sep 1, 2020, 8:56 PM IST

90 கோடி வாக்காளர்களைக் கொண்ட புள்ளி விவரங்களுடன், உலகின் ’ஜனநாயக வழிகாட்டி’ என்ற நற்பெயரை இந்தியா பெற்றிருக்கிறது. இந்தியாவின் மூன்றடுக்கு நிர்வாகத்தின் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதை அடிப்படையாகக் கொண்ட வாக்காளர் பட்டியலின் தற்போதைய நிலையை பார்க்கும்போது வேதனையாக உள்ளது.

”மத்தியிலும் மாநிலங்களிலும் உள்ள தேர்தல் ஆணையங்கள், பல ஆண்டுகளாக சுட்டிக்காட்டப்படும் கவலைகளைக் கண்டு கொள்ளாமல் வாக்காளர் பட்டியல் தயாரிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றன. எனவே, வாக்காளர் பட்டியல் தயாரித்தலை ஒரு கடமையாகக் கருதி மிகவும் முக்கியத்துவம் கொடுத்து அந்தப் பணியை மேற்கொள்ள வேண்டும்” என்று அம்பேத்கா் ஒருமுறை நமக்கு நினைவுப்படுத்தி இருக்கிறார்.

கடந்த பொதுத்தேர்தல்களின்போது தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளின்படி பிஜேபி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு லோக்சபா, சட்டப்பேரவை, உள்ளாட்சி அமைப்புகள் என அனைத்துத் தேர்தல்களுக்கும் ஒரே வாக்காளர் பட்டியல் கொண்டு வருவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுத்தது. அரசியல் சட்டப்பிரிவு 324இன் படி லோக்சபா, சட்டப்பேரவை தேர்தல்களுக்கான உறுதியான வாக்காளர் பட்டியலை பராமரிக்கச் சட்டங்கள் வலிமையாக்கப்பட்டுள்ளன.

மாநிலத் தேர்தல் ஆணையங்கள், உள்ளாட்சித் தேர்தலை நடத்த அதிகாரம் படைத்தவை. தங்களின் அரசியல் சட்ட கடமையை நிறைவேற்ற மாநிலத் தேர்தல் ஆணையங்கள் வாக்காளர் பட்டியலைத் தொகுக்கின்றன. ஆகவே 22 மாநிலங்கள், மத்தியத் தேர்தல் ஆணையம் தயாரிக்கும் வாக்காளர் பட்டியலை நம்பியே உள்ளன. அதே நேரத்தில் உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், ஒடிசா, அசாம், மத்தியப் பிரதேசம், கேரளா, அருணாசலப் பிரதேசம், நாகலாந்து மாநில தேர்தல் ஆணையங்கள், தங்களுக்கு என தனித்தன்மையை வெளிப்படுத்தும் வகையில் தனிப்பட்ட வாக்காளர் பட்டியலைத் தயாரிக்கின்றன.

1999, 2004 ஆகிய ஆண்டுத் தேர்தல்களின்போது நாடு முழுவதும் ஒரே ஒரு வாக்காளர் பட்டியல் என்ற முறையை அறிமுகம் செய்ய தேர்தல் ஆணையம் ஆதரவு அளித்தது. பொதுத்தேர்தலின்போது 2015ஆம் ஆண்டு நீதித்துறை தீர்ப்பாயமும் இதனை பூர்வாங்க முறையில் ஆதரித்தது. இந்த நடைமுறையில் சம்பந்தப்பட்ட மாநிலங்கள் தனியாக வாக்காளர் பட்டியல் தயாரிப்பதால் வீணாகும் அதிக செலவிலங்களை தவிர்க்கும் நோக்கத்துடன், மாநில சட்டங்களில் குறிப்பிட்ட மாற்றங்கள் கொண்டுவர திட்டமிடப்பட்டது. ஒரு தேசத்தில் ஒரே ஒரு வாக்காளர் பட்டியலை பராமரிப்பது நல்ல யோசனையாக இருந்தாலும், இந்தப் பட்டியல் நம்பகத்தன்மை கொண்டதா இல்லையா என்பதையும் பார்க்க வேண்டும்.

வாக்கு என்றால் என்ன?

கடந்த காலங்களில் முதல் தேர்தலின்போதும், அதனைத் தொடர்ந்து வந்த பொதுத்தேர்தலிலும் அறிமுகம் செய்யப்பட்ட வாக்களிப்பு முறைகள் குறித்த முழுமையான அறிவைக் கொண்டு வாக்களிக்க முடிந்தது என்று இந்தியத் தேர்தல் ஆணையம் பெருமிதம் கொள்கிறது. வாக்கு உரிமை என்பதை தாங்கள் உயிரோடு இருப்பதற்கான அடையாளமாக வாக்காளர்கள் கருதுவதால் தங்கள் பெயர் விடுபட்டது குறித்து தேர்தல் ஆணையத்தை மிகவும் ஆக்ரோஷமாக கேள்வி கேட்பவர்களாக மாறி வருகின்றனர்.

இப்போதைய நாள்களில் எந்த ஒரு செயலற்ற தன்மையும் லட்சகணக்கான மக்ககளைக் கிளர்ச்சியடைய வழிவகுப்பதாக இருக்கிறது. கடந்த 2015ஆம் ஆண்டு பிப்ரவரியில் தலைமைத் தேர்தல் ஆணையர் எச்.எஸ்.பிரம்மா, நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் உள்ள 8.50 வாக்காளர்களின் பெயர்கள் போலியானவை என்று அறிவித்தார். மொத்த வாக்குளில் 10-12 சதவிகிதம் கள்ள ஓட்டுகள் என்றும் அவர் கூறினார். இது ஒரு தேசியப் பிரச்னையாக இருக்கிறது. குடிமக்களின் அடிப்படை எண்ணிக்கை, வாக்காளர் பட்டியலுடன் 2015ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் இணைக்கப்படும் என்றார்.

ஆனால், அனைத்துப் பரிமாற்றங்களுக்கும் ஆதார் அட்டையை கட்டாயமாக்குவது போதுமானதாக இருக்காது என்று உச்ச நீதிமன்றம் கூறியதை அடுத்து, இந்தத் திட்டம் கிடப்பில் போடப்பட்டது. வாக்களிக்கும் உரிமையை வலியுறுத்தும் தேர்தல் ஆணையத்தின் பொது விழிப்புணர்வு இயக்கத்தில் பங்கேற்று குரல் கொடுக்கும் பிரபலங்களின் பெயர்கள்கூட, தேசிய வாக்காளர் பட்டியலில் இருந்து காணாமல்போகத் தொடங்கி இருக்கிறது. தேர்தல் ஆணையத்தின் முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர்கூட நம்பள்ளியின் வாக்காளராக காட்டப்பட்டுள்ள மறுக்க முடியாத எடுத்துக்காட்டுகளும் உள்ளன.

தேர்தல் கமிஷன் தரப்பில் எப்போதெல்லாம் இது போன்ற கவனக்குறைவு ஏற்படுகிறதோ அப்போதும், அதற்கு முன்பும் ”மன்னித்துக் கொள்ளுங்கள் தவறுதலாக நடந்து விட்டது” என்று சொல்லுவதற்கு அப்பாலும் நாம் செயல்படவேண்டும். இந்திய வாக்காளர்களின் சரியான, ஆதாரப்பூர்வமான பட்டியலைக் கொண்டு வாருங்கள்.

அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, கனடா, பிரான்ஸ், பின்லாந்து நாடுகளில் மேற்கொள்ளப்படும் நிர்வாக நடைமுறைகளின்படி தேர்தலை சுமுகமாக நடத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இந்தியாவில் ஜனநாயகத்தை வென்றெடுக்க முடியும். போலியான விவரங்களை முழுமையாகக் களைய வேண்டியது அவசியத்தேவையாகும். தொழில்நுட்பத்தை உபயோகப்படுத்தி வாக்காளர் பட்டியலைத் தூய்மைப்படுத்தி, தெளிவானதொரு வாக்காளர் பட்டியலை வெளியிட்டு இந்தியக் குடிமக்களுக்கு உதவ வேண்டும்.

ABOUT THE AUTHOR

...view details