கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டம் மலா பகுதியைச் சேர்ந்தவர் சி.ஏ. கிருஷ்ணா. தந்தை அஜய் கலிந்தி விஷ்ணு கோயிலில் அர்ச்சகராக உள்ளார், தாய் இந்து இவர்களது ஒரே மகள் கிருஷ்ணா. தனது ஏழாம் வகுப்பில் இருந்தே குதிரை ஓட்ட பயிற்சி எடுத்து வருகிறார். இவர் தனியார் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வருகிறார். தற்போது 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இறுதித் தேர்வான இன்று கிருஷ்ணா தனது பள்ளிக்கு தேர்வு எழுதுவதற்காக குதிரையில் சென்றுள்ளார்.
குதிரையில் பொதுத் தேர்வு எழுதச் சென்ற பள்ளி மாணவி! - kerala
கேரளா: திருச்சூர் மாவட்டத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்விற்கு குதிரையில் சென்ற பள்ளி மாணவியின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இவர் குதிரையில் பயணித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், இது குறித்து கிருஷ்ணா கூறியதாவது, ”வீட்டில் இரண்டு குதிரைகள் உள்ளன. இரண்டும் தனது தந்தை பரிசாக கொடுத்தது. இதேபோல், 9ஆம் வகுப்பு படிக்கும்போது இதேபோல் இறுதித் தேர்வுக்கு குதிரையில் தான் சென்றேன். அப்போது, எனது நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் மட்டுமே தெரிந்தது. ஆனால், இம்முறை எனது பயிற்சியாளர்களால் வீடியோ எடுக்கப்பட்டு வைரலாகி வருகிறது.
முதலில் குதிரையை சாலையில் ஓட்டுவது கடினம் என்று எண்ணினேன். பிறகு, முயற்சித்தால் நிச்சயமாக ஓட்டி விடலாம் என்று சிந்தித்தேன். அதனைத் தொடர்ந்தே இறுதித் தேர்வான சமூக அறிவியல் பேப்பர் அன்று குதிரையில் பள்ளிக்கு செல்ல முடிவேடுத்தேன் என்று கூறினார்.