தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

காதலை மறுத்த கல்லூரி மாணவிக்கு கத்திகுத்து - இளைஞர் போலீசில் ஒப்படைப்பு - விசாகப்பட்டினம், அனகபள்ளி, கத்திகுத்து

விசாகப்பட்டினம்: காதலை ஏற்க மறுத்த கல்லூரி மாணவியை கத்தியால் குத்திவிட்டு தப்ப முயன்ற இளைஞரை பொதுமக்கள் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

girl-attacked

By

Published : Aug 29, 2019, 3:20 PM IST

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அடுத்த அனகபள்ளியில் காதலை ஏற்க மறுத்த கல்லூரி மாணவியை நாகசாய் என்ற இளைஞர் கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த அந்த மாணவி மயங்கி கீழே விழுந்தார். பின் அங்கிருந்து தப்பிக்க முயன்ற அந்த இளைஞரை பொதுமக்கள் மடக்கிப்பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

தொடர்நது மாணவியை மீட்ட பொதுமக்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், மாணவியின் கழுத்து, தோள்பட்டை, மார்பு, விலா எலும்புகளிலும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

காதலை மறுத்த கல்லூரி மாணவிக்கு கத்திகுத்து

மேலும், இளம் பெண்ணை கத்தியால் குத்திய இளைஞர் நாகசாய் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காதலை ஏற்க மறுத்த மாணவி கத்திக்குத்துக்கு உள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details