புதுச்சேரி மாநிலம் காரைக்கால் கீழவாஞ்சூரில் பகுதியில் அமைந்துள்ள லட்சுமி மதுபானக்கடையை ஆஜேஷ் ராம், மாதேஷ் ராம், சிவகாளிமுத்து ஆகிய மூன்றுபேரும் நடத்திவருகின்றனர்.
இந்த மதுபானக்கடை புதுச்சேரி-நாகப்பட்டினம் எல்லையில் அமைந்திருப்பதால் தினமும் இங்கு அதிகளவில் வாடிக்கையார்கள் வருகைதருவர். நேற்றிரவு வழக்கம்போல் கடை செயல்பட்டுக் கொண்டிருக்கும்போது முகத்தில் கைக்குட்டை கட்டிக்கொண்டு அங்குவந்த ஆறு பேர் கொண்ட கும்பல் திடீரென கடையை அடித்து நொறுக்கினர்.
அடித்து நொறுக்கியதோடு கடையின் மேலாளரான கணபதி என்பவருக்குக் கொலை மிரட்டல் விடுத்துவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர். உடனே இது குறித்து கணபதி திருப்பட்டினம் காவல் துறையினருக்கு புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில், கடையின் சிசிடிவி பதிவுகளைக் கொண்டு காவல் துறையினர் விசாரித்துவருகின்றனர். இச்சம்பவத்தில் 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மதுபான பாட்டில்கள் சேதமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க:புதுச்சேரி இடைத்தேர்தலில் 69.44% வாக்குகள் பதிவு