அன்னை தெரசாவின் நினைவு நாளையொட்டி, புதுச்சேரி பாரதி பூங்கா அருகே நிறுவப்பட்டுள்ள அவரது சிலைக்கு முதலைச்சர் நாராயணசாமி சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி முதலைச்சரின் பாராளுமன்ற செயலர் லட்சுமி நாராயணன் ஆகியோர் அன்னை தெரசாவின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
அன்னை தெரசா நினைவு தினம்; முதலமைச்சர் அஞ்சலி! - Puducherry Chief Minister Narayanasamy
புதுச்சேரி: அன்னை தெரசாவின் நினைவுத்தினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் தலைவர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.
![அன்னை தெரசா நினைவு தினம்; முதலமைச்சர் அஞ்சலி! அன்னை தெரசாவின் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு மலர் தூவி மரியாதை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-12:04:04:1599287644-tn-pud-01-theresa-aniversary-cm-7205842-05092020115727-0509f-1599287247-876.jpg)
அன்னை தெரசாவின் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு மலர் தூவி மரியாதை
தொடர்ந்து செய்தித் துறை இயக்குநர் வினைராஜ் மற்றும் பலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்கள். இதேபோல் மிஷினரிஸ் ஆப் சாரிட்டி வளாகத்திலும் அன்னை தெரசாவின் படத்துக்கு மாலை அணிவித்து சகோதரிகள் அஞ்சலி செலுத்தினர்.