உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய ராம் ஜென்ம பூமி - பாபர் மசூதி நிலம் தொடர்பாக நீண்ட காலமாக நிலுவையிலிருந்த வழக்கு அண்மையில் முடிவுக்குவந்தது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு ராமர் கோயில் கட்ட மத்திய அரசு அறக்கட்டளை அமைக்க உத்தரவிட்டது. அதேபோல் மசூதி கட்ட சன்னி வக்பு வாரியத்திற்கு 5 ஏக்கர் நிலமளித்து உத்தரவிட்டது.
இந்த தீர்ப்பு குறித்து, உத்தரப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் கல்யாண் சிங், 500 ஆண்டு கால சிக்கல் இந்த தீர்ப்பின் மூலம் முடிவுக்கு வந்துள்ளது. அனைவரையும் அரவணைக்கும் விதமான இந்த தீர்ப்பை அனைத்து தரப்பினரும் வரவேற்றுள்ளனர் எனத் தெரிவித்தார்.