தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'செத்த எலி' விமர்சனம்: கட்டாருக்கு காங்கிரஸ் கண்டனம் - ஹரியானா முதலமைச்சர் மனோகர்லால் கட்டார்

குர்கான்: காங்கிரசின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியை செத்த எலி என்று விமர்சித்த ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

Manohar Lal

By

Published : Oct 14, 2019, 5:09 PM IST

செத்த எலி

ஹரியானா மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வருகிற 21ஆம் தேதி நடக்கிறது. இந்த நிலையில் மாநில முதலமைச்சர் மனோகர்லால் கட்டார் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில், “மக்களவைத் தேர்தலுக்கு (2019) பின்னர் காங்கிரஸ் தலைவர் ஒன்றை கூறினார். என்னால் இனி தொடர முடியாது. வேறு ஒரு தலைவரை பார்த்துக் கொள்ளுங்கள். அந்த நபர் காந்தி அல்லாத குடும்பமாக இருக்கட்டும் என்று கூறி பதவியை ராஜினாமா செய்தார்.

இதையும் படிக்கலாம்: ஹரியானா அரசியலில் திடீர் திருப்பம் - காங்கிரஸில் இணைந்த முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்

மூன்று மாதங்கள் கழிந்தன. சோனியா காந்தி மீண்டும் தலைவராக வந்தார். மலையைத் தோண்டும்போது செத்த எலி வந்த கதை தெரியுமா? அது இதுதான். அவர்களுக்கு சோனியா, ராகுலைத் தவிர வேறு யாரும் தெரியாது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

கடும் கண்டனம்

மனோகர் லால் கட்டாரின் அறிக்கை காங்கிரஸ் தொண்டர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த அகில இந்திய மகளிர் காங்கிரஸ் தலைவர் சுஷ்மிதா தேவ் கூறியிருப்பதாவது:

மனோகர் லால் கட்டாரின் அறிக்கை அச்சில் ஏற்ற முடியாதவை. பாரதிய ஜனதா கட்சியினர் பெண்களை எப்படி நடத்துவார்கள் என்பதை இந்த அறிக்கை காட்டுகிறது. பொருளாதாரத்தில் நாடு பின்நோக்கிச் செல்கிறது.

நிபந்தனையற்ற மன்னிப்பு

இளைஞர்களுக்க வேலைவாய்ப்பு இல்லை. ஹரியானா தலைநகரில் என்ன நடக்கிறது? கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை சர்வசாதாரணமாக நடக்கிறது. இதிலிருந்து மக்களை திசைதிருப்பவே இந்த மாதிரி கட்டார் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அவரின் கருத்துகள் ஒழுக்கங்கெட்டவை. இதுபோன்ற கீழ்த்தரமான விமர்சனங்களை அவர் நிறுத்திக் கொள்ள வேண்டும். மேலும் அவர் நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்க வேண்டும். அவரின் கருத்துகளுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு சுஷ்மிதா தேவ் கூறியுள்ளார்.

இதையும் படிக்கலாம்: 'ஆப்பரேஷன் 75' - ஹரியானாவில் மோடி... யோகி பரப்புரை!

ABOUT THE AUTHOR

...view details