வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆம்பன் புயல் இன்று கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதனால் ஒடிசா, மேற்கு வங்கத்தில் நேற்றிலிருந்து கனமழை பெய்துவருகிறது. இந்த நிலையில், ஒடிசா மாநிலம் பத்ரக் மாவட்டத்தில் பெய்த கனமழையால் தக்ஷின்பரி கிராமத்தில் வசித்துவரும் வலாரம் தாஸ் என்பவரது வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது.
ஆம்பன் புயலால் கனமழை; வீட்டின் சுவர் இடிந்து 3 மாத குழந்தை உயிரிழப்பு - amphan cyclone
புவனேஸ்வர்: ஆம்பன் புயல் காரணமாக பெய்த கனமழையால் ஒடிசா மாநிலத்தின் பத்ரக் பகுதியில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் 3 மாத குழந்தை உயிரிழந்தது.
-house-collapsed-due-to-heavy-rains
அதில், அவரது 3 மாத ஆண் குழந்தை உயிரிழந்தது. அவரது மனைவி லேசான காயங்களுடன் உயிர்தப்பினார். மேலும், வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆம்பன் புயல் இன்று (மே 20) பிற்பகல் கரையைக் கடக்கும் நிலையில், ஒடிசா, மேற்கு வங்கம் மாநிலங்களின் கடல் பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதையும் படிங்க:ஆம்பன் புயல்: மரம் விழுந்து இருவர் காயம்