தெலங்கானா மாநிலம், நல்கொண்டாவைச் சேர்ந்தவர் சதாம்(26). இவரால் அவரது உறவினர் பெண் ஒருவர், இரண்டு வருடங்களுக்கு முன் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. சதாம் குடும்பத்திற்கும், தற்கொலை செய்து கொண்ட பெண் குடும்பத்திற்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
முன்விரோதத்தில் கொலை: பழிக்கு பழி தீர்த்த உறவினர்கள்! - நல்கொண்டா
ஹைதராபாத்: முன்விரோதத்தில் இளைஞர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நல்கொண்டாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், நேற்று சதாம் அந்த வழியே சென்றுக் கொண்டிருந்த போது, அங்கு வந்த அந்த பெண்ணின் உறவினர்கள் சதாமை கொடூரமாக கொலை செய்ததோடு மட்டுமல்லாமல், அவரது உடலில் இருந்து தலையை தனியாக வெட்டி எடுத்துக் கொண்டு காவல்நிலையத்தில் சரணடைந்தனர். இதையடுத்து இருவர் மீதும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்விரோதத்தில் இளைஞரை கொன்று தலையுடன் இருவர் காவல்நிலையத்தில் சரணடைந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.