கேரளாவில், ஒன்பதாம் வகுப்பு படித்து வரும் பழங்குடி இனத்தைச் சேர்ந்த மாணவியைக் கடத்தி நான்கு பேர் கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். இந்த வழக்கில் புதுக்குறிச்சி கடினாம்குளத்தைச் சேர்ந்த 20 வயதுடைய நிரஞ்சன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் தலைமறைவாக இருந்த சோஜன் (24), அபிலாஷ் (25), டோமி (23) ஆகிய மூவரையும் காவல்துறையினர் பிடித்துள்ளனர். இவர்கள் அனைவரின் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த மாணவியைக் காணவில்லை என அக்டோபர் 30ஆம் தேதி மாலையே விடுதி கண்காணிப்பாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இது குறித்த விசாரணையில், விடுதிக்குச் செல்ல மாணவி தன் நண்பரின் இரு சக்கர வாகனத்தில் புறப்பட்டுள்ளார்.