தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

#9Baje9Minute: இன்று இரவு 9 மணிக்கு விளக்குகளை அணைக்க அகிலேஷ் யாதவ் அழைப்பு!

லக்னோ: இளைஞர்களின் வேலைவாய்ப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க இன்று (செப்டம்பர் 9) இரவு 9 மணியளவில் 9 நிமிடம் விளக்குகளை அணைக்குமாறு சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

yadav
yadav

By

Published : Sep 9, 2020, 8:21 PM IST

ஊரடங்கு உத்தரவால் பல நிறுவனங்கள் பெரும் நெருக்கடியை சந்திக்க நேரிட்டது. அதன் விளைவாக, பல நிறுவனங்கள் ஆட்குறைப்பு பணியில் ஈடுபட்டன. புதிதாக பணிநியமனம் செய்வதும் தள்ளிச்சென்றது. போட்டி தேர்வுகளுக்கு தயாராகி கொண்டிருந்த மாணவர்களும் தேர்வு நடக்குமா நடக்காதா என்ற குழப்பத்தில் உள்ளனர். இது தொடர்பாக பல இடங்களில் இளைஞர்கள் குரல் ஏழுப்பி வருகின்றனர்.

எனவே, இளைஞர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் #9Baje9Minute என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது. அதாவது, இன்று (செப்டம்பர் 9) இரவு 9 மணியளவில் 9 நிமிடங்களுக்கு அனைத்து விளக்குகளையும் அணைத்து ஆதரவு தெரிவிக்க பல அரசியல் கட்சியினர் முடிவு செய்துள்ளனர்.

இது குறித்து ட்வீட் செய்துள்ள சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், "வாருங்கள், வேலையின்மை இருளை எதிர்கொள்ளும் இளைஞர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு ஒற்றுமையை வெளிப்படுத்த இன்று இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் விளக்குகளை அணைப்பதன் மூலம் புரட்சியின் ஜோதியை ஒளிரச் செய்வோம்" என #9Baje9Minute, #NoMoreBJP இரண்டு ஹேஷ்டேக்குகளுடன் பதிவிட்டிருந்தார்.

முன்னதாக, இளைஞர்கள் குரல் எழுப்பி கொண்டிருக்கும் வேலைவாய்ப்பு தொடர்பான போராட்டத்திற்கு நாம் அனைவரும் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details