தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கிராம தலைவரான 97 வயது மூதாட்டி - கிராமத் தலைவரான 97 வயது மூதாட்டி

ஜெய்பூர்: உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் கிராமத் தலைவராக 97 வயது மூதாட்டி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Rajasthan
Rajasthan

By

Published : Jan 18, 2020, 12:41 PM IST

ராஜஸ்தான் மாநிலம் பூரணவாஸ் கிராமத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் 97 வயது மூதாட்டியான வித்யா தேவி போட்டுயிட்டு வெற்றி பெற்றுள்ளார். இரண்டாவது இடத்தைப் பிடித்த ஆரத்தி மீனாவைவிட 207 வாக்குகள் அதிகம் பெற்று கிராம தலைவராக வித்யா தேவி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ராஜஸ்தான்

வித்யா தேவி 843 வாக்குகளையும் மீனா 636 வாக்குகளையும் தேர்தலில் பெற்றனர். 11 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். வித்யா தேவியின் கணவரான சிவராம் சிங் 25 ஆண்டுகளாக கிராமத் தலைவராக இருந்துள்ளார். 2,726 கிராம பஞ்சாயத்து பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்க 26,800 வார்டுகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. 93 லட்சத்து 20 ஆயிரத்து 684 வாக்காளர்கள் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ளனர்.

இதில் ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை 48 லட்சத்து 49 ஆயிரத்து 232 ஆகும். பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 44 லட்சத்து 71 ஆயிரத்து 405 ஆகும்.

இதையும் படிங்க: ஈடிவி பாரத் அலுவலகத்திற்கு வருகைதந்த அமெரிக்க தூதர்

ABOUT THE AUTHOR

...view details