சிம்லா: மாநிலத்தில் மொத்தம் 912 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும் கரோனா நோய்க் கிருமியை சோதிக்க 16 பேரின் மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளதாக இமாச்சலப் பிரதேச கூடுதல் தலைமைச் செயலர் ஆர்.டி. திமான் தெரிவித்துள்ளார்.
இமாச்சலில் புதிதாக 912 பேர்...! - மாநில அரசு தகவல் - 912 under surveillance for coronavirus in Himachal
கோவிட் -19 நோயைக் கருத்தில்கொண்டு, இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த 912 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
![இமாச்சலில் புதிதாக 912 பேர்...! - மாநில அரசு தகவல் 912 under surveillance for coronavirus in Himachal](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-6534160-81-6534160-1585122684147.jpg)
912 under surveillance for coronavirus in Himachal
மாநிலத்தில் கண்காணிப்பில் இருந்த ஐந்து பேருக்கு நோய்த் தொற்று இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும், 11 பேரின் மருத்துவ அறிக்கைக்காகக் காத்திருப்பதாக ஆர்.டி. திமான் தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசின் 21 நாள்கள் ஊரடங்கு உத்தரவு சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டுள்ளது என்று கூறிய அவர், மூன்று பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாகவும், ஒருவர் உயிரிழந்ததாகவும் தெரிவித்தார்.