புதுச்சேரியில் மேலும் 91 பேருக்கு கரோனா - புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குனர்
புதுச்சேரி: இன்று (ஜூலை 17) புதிதாக 91 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை இயக்குநர் தெரிவித்துள்ளார்.
![புதுச்சேரியில் மேலும் 91 பேருக்கு கரோனா சுகாதாரத்துறை இயக்குநர்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-03:48:43:1594981123-tn-pud-03-health-director-mohan-byte-7205842-17072020150243-1707f-1594978363-856.jpg)
புதுச்சேரியில் சுகாதாரத்துறை இயக்குநர் மோகன் குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது," புதுச்சேரியில் இன்று ( ஜூலை 17) புதிதாக 91 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் புதுச்சேரியில் 79 பேரும் காரைக்காலில் 9 பேரும் ஏனாமில் 3 பேர் ஆவர்.
மேலும் ஜிப்மர் மருத்துவமனையில் 2 பேரும், ஏனாமில் ஒருவர் என 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,832 ஆக உயர்ந்துள்ளது. இதில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 793 ஆக உள்ளது. குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 1, 014 பேர். புதுச்சேரியில் இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது" என்றார்.