புதுச்சேரியில் வரும் 20ஆம் தேதிக்குப் பிறகு, 90 விழுக்காடு தொழிற்சாலைகளை இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், "புதுச்சேரி மாநிலத்தில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 6 பேர் இந்திரா காந்தி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அவர்கள் உடல் நலம் தேறி வருகின்றனர். புதுச்சேரியில் வரும் 20ஆம் தேதிக்குப் பிறகு, 90 விழுக்காடு தொழிற்சாலைகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
தொடர்ந்து அவர் கூறுகையில், "இது குறித்து தொழில்துறை அமைச்சர் மற்றும் தலைமைச் செயலாளர் ஆகியோர் இணைந்து விரைவில் முடிவு எடுப்பார்கள். கார்பென்டர், பிளெம்பர், பெயிண்டர் இப்படி பல்வேறு தொழில் செய்பவர்கள் 20ஆம் தேதிக்குப் பிறகு தொழிலை செய்யலாம் என மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், அவர்களுக்குத் தேவையான பொருட்களை வாங்க வேண்டிய கடைகள் திறக்கப்பட வேண்டியது அவசியமாகும். இது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும்.