தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

காற்று மாசுபாட்டிற்கு எதிராகக் களமிறங்கிய 9 வயது இந்தியப் போராளி!

தேசியத் தலைநகர் பகுதியில் அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து, பாதாகைகளை ஏந்தி ஒன்பது வயது சிறுமி லிசிப்ரியா கங்குஜம் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

9-year-old-activist-stage-protest-on-air-pollution-in-delhi
9-year-old-activist-stage-protest-on-air-pollution-in-delhi

By

Published : Oct 16, 2020, 12:32 PM IST

டெல்லி :கடந்த ஆண்டு ஸ்பெயினில் நடைபெற்ற காலநிலை மாற்றம் தொடர்பான ஐ.நா கருத்தரங்கில் பேசியவர் இந்தியாவின் இளம் காலநிலை ஆர்வலர் லிசிப்ரியா கங்குஜம்.

இவர் தற்போது தேசியத் தலைநகர் பகுதியில் அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து, விஜய் சௌக் பகுதியில், பாதாகைகளை ஏந்தி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது பேசிய அவர், காற்று மாசுபாட்டிற்கு எதிராக அரசாங்கமும், அரசியல் தலைவர்களும் தக்க நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் எனதான் நான் விரும்புகிறேன். ஆனால், அவர்களோ பிரச்னைக்கான தீர்வினை நோக்கி நகராமல், ஒருவர் மீது ஒருவர் பழி சுமத்தி வருகின்றனர். இதுவரை இது குறித்து எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமலே உள்ளனர்.

காற்று மாசுபாடு மிகவும் ஆபத்தான நிலையை எட்டி வருகிறது. குழந்தைகள் வீட்டை விட்டு வெளியேற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அவர்களது நிலையை எண்ணி கவலை கொள்கிறேன்.

குப்பைக் கழிவுகளை எரிப்பது, பெட்ரோல், டீசல் வாகனங்களை அதிக அளவு பயன்படுத்துவது ஆகியவை ஹரியானா, பஞ்சாப்பில் அதிக அளவு காற்று மாசுபாடு ஏற்படுவதற்கு காரணங்களாக அமைகின்றன” எனக் குற்றம் சாட்டினார்.

இந்த ஆர்பாட்டத்தின்போது, “டெல்லி, மூச்சுத் திணறலை சந்தித்து வருகிறது. தலைவர்கள் ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்தத் தொடங்கியுள்ளனர். ஆனால், தற்போதுவரை தகுந்த நடவடிக்கைகள் எதுவும் எட்டப்படவில்லை” என்ற வாசகம் பொருந்திய பதாகையை அவர் ஏந்தியிருந்தார்.

ABOUT THE AUTHOR

...view details