மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த ஆண்டு மே 30ஆம் தேதி 16 வயது சிறுமி ஒருவர், அவரது வீட்டிலேயே பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்படுகிறார். அதற்கு எட்டு நாள்களுக்கு முன்னர்தான் மற்றொரு பெண் இதேபோல கொலை செய்யப்பட்டிருந்தார். இதனால் இச்சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக அச்சிறுமியின் வீட்டின் வெளியே இருந்த சிசிடிவி காட்சிகளை காவல் துறையினர் ஆய்வுசெய்தனர். அதில், சிவப்பு நிற ஹெல்மெட், சிவப்பு பைக்கில் ஒருவர் சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் அங்கேயே சுற்றிக் கொண்டிருந்ததும், அச்சிறுமியின் வீட்டிற்குள் சென்றுவிட்டு, சிறிது நேரத்தில் அவசர அவசரமாக வெளியேறியதும் தெளிவாக பதிவாகியிருந்து.
சந்தேகமடைந்த காவல் துறையினர் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் 38 வயதான கம்ருஸ்மான் சர்க்கார் என்பவரைக் கைதுசெய்துள்ளனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகின.
சர்க்காரின் கொலைவெறி
2013ஆம் ஆண்டு தொடங்கிய சர்க்காரின் கொலை செய்யும் படலம் 2019ஆம் ஆண்டு வரை நீடித்துள்ளது. இந்தக் காலகட்டத்தில் சர்க்கார் ஒன்பது பெண்களைக் கொடூரமாகக் கொலை செய்துள்ளான். அவர்களில் இருவரைப் பாலியல் வன்புணர்வும் செய்துள்ளான். இதுதவிர ஆறு பெண்களைக் கொலைசெய்ய முயற்சித்துள்ளான்.
பொதுவாக, ஆண்கள் இல்லாத வீடுகளை நோட்டமிட்டுக் கண்டுபிடிக்கும் சர்க்கார், மதிய நேரத்தில் மின்சார அளவீடு செய்யும் நபர் போல் வீட்டிற்குள் நுழைவான். அப்போது, எதிர்பார்க்காத நேரத்தில் பெண்களைக் கீழே தள்ளி, அவர்கள் மீது அமர்ந்து கொள்வான். அப்போது, தான் மறைத்து வைத்திருக்கும் சைக்கிள் செயின் மூலம் அவர்களின் கழுத்தை நெறுக்கி கொலைசெய்யும் தொடர் கொலைகாரன்தான் (serial killer)
இந்த சர்க்கார். மேலும், அப்பெண்கள் உயிரிழந்ததை உறுதிசெய்ய, தனது சைக்கிள் செயின் மூலம் அவர்கள் தலையிலேயே பலமாக அடிப்பான்.