தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'9.73 லட்சம் பேர் வாக்களிக்கவுள்ளனர்' புதுச்சேரி மாநில தேர்தல் அலுவலர்

புதுச்சேரி: மக்களவைத் தேர்தலில் சுமார் 9 லட்சத்து 73 ஆயிரத்து 161 வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளதாக புதுச்சேரி மாநில தேர்தல் அலுவலர் கந்தவேலு தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி மாநில தேர்தல் அலுவலர் கந்தவ்லு பேட்டி

By

Published : Apr 17, 2019, 10:37 AM IST

புதுச்சேரியில் நாளை மக்களவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது.

இந்நிலையில், புதுச்சேரி மாநிலத் தலைமைத் தேர்தல் அலுவலர் கந்தவேலு நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், புதுச்சேரியில் எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் 9 ,73, 161 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

புதுவை முழுவதும் 970 இடங்களில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் 222 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை, 25 வாக்குச்சாவடிகள் மிகப் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளன.

புதுச்சேரி மாநில தேர்தல் அலுவலர் கந்தவேலு பேட்டி
தேர்தலையொட்டி புதுச்சேரி மாநிலம் முழுவதும் மது விற்பனை தடை ஏப்ரல் 16ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்காக மொத்தம் 4 ஆயிரத்து 433 வாக்குச்சாவடி அலுவலர்களும், புதுவை காவல்துறைக்கு உதவியாக பத்து துணை இராணுவ கம்பெனிகள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

இதுவரை ஒரு மதுபானக் கடை, இரண்டு சாராயக் கடைகள் சீல் வைக்கப்பட்டுள்ளது. ஆவணங்களின்றி எடுத்துச்செல்லப்பட்ட போது கைப்பற்றப்பட்ட ரொக்கப்பணம் 3 லட்சத்து 44 ஆயிரத்து 18 ஆகும். மேலும், ஒன்பது லட்சத்து 21 ஆயிரத்து 245 ரூபாய் மதிப்புள்ள மதுபானங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன என்றார்.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details