கஃபே காபி டே நிறுவனத்தின் தலைவர் சித்தார்த்தா கடன் சுமை தாங்காமல் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
கடன் சுமையால் சொத்துகளை விற்கும் 'கஃபே காபி டே'! - burden
பெங்களூரு: கடன் சுமை தாங்காமல் கஃபே காபி டே நிறுவனம் தனது ஐடி பார்க் நிலத்தை விற்க முடிவு செய்துள்ளது.
சிசிடி
இந்நிலையில், கஃபே காபி டே நிறுவனம் கடன் சுமையைக் குறைக்க, தனக்குச் சொந்தமான ஒன்பது ஏக்கர் தொழில்நுட்பப் பூங்காவை விற்க முடிவு செய்துள்ளது. அந்த நிலத்தை அமெரிக்காவின் புகழ்பெற்ற ப்ளாக்-ஸ்டோன் வாங்க ஆர்வம் காட்டிவருவதாகத் தெரிகிறது.
மேலும், தொழில்நுட்பப் பூங்காவை விற்பது குறித்த கலந்தாய்வின்போது கஃபே காபி டே இயக்குநர்கள் மூன்று முக்கிய முடிவுகளையும் எடுத்துள்ளனர். அதன்படியே இந்த ஒன்பது ஏக்கர் நிலத்தையும் விற்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.