தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கோவிட்-19: மோடிக்கு மக்கள் ஆதரவு

கரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கையில் பிரதமர் மோடிக்கு ஆதரவாக 87 விழுக்காடு நகர மக்கள் கருத்து தெரிவித்துள்ளதாக இப்சாஸ் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Modi
Modi

By

Published : May 6, 2020, 12:53 PM IST

கரோனா வைரஸ் நோய் உலக நாடுகளில் வேகமாக பரவிவருகிறது. வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பல்வேறு விதமான நடவடிக்கைகளை பல நாடுகள் மேற்கொண்டுவருகின்றன. இதையடுத்து, கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மக்களிடையே கேட்டறிந்து இப்சாஸ் ஆராய்ச்சி நிறுவனம் கருத்துக்கணிப்பு வெளியிட்டுள்ளது.

13 நாடுகளில் 26,000 பேரிடம் இந்த கருத்துக்கணிப்பு எடுக்கப்பட்டுள்ளது. கரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கையில் தங்கள் அரசு சிறப்பாக செயல்பட்டதாக 9 நாடுகளில் உள்ள பெரும்பான்மையான மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். கரோனா வைரஸ் நோய் கட்டுப்படுத்துவது தொடர்பான விவகாரத்தில், தொடக்கக் காலத்தில் உலக சுகாதார அமைப்பு கடும் விமர்சனத்துக்கு உள்ளானது.

இருப்பினும், அதற்கு பிறகு மேற்கொண்ட நடவடிக்கையின் காரணமாக 11 நாடுகளில் உள்ள பெரும்பான்மையான மக்கள் உலக சுகாதார அமைப்புக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தனர். மார்ச் மாதத்துக்கு பிறகு 9 நாடுகளில் இந்த ஆதரவு வெகுவாக குறைந்தது. வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கையில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு சிறப்பாக செயல்பட்டதாக கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. உலக சுகாதார அமைப்புக்கு ஆதரவாக 75 விழுக்காடு இந்தியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: நாளை சொல்கிறேன் - ஆரோக்கிய சேது விவகாரத்தில் ஹேக்கர் பதில்

ABOUT THE AUTHOR

...view details