தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கரோனா: குழந்தைகளின் எதிர்காலம் குறித்து 85% பெற்றோர்கள் அச்சம் - இந்தியா கரோனா பாதிப்பு

மும்பை: இந்தியாவில் கரோனா பெருந்தொற்று பரவலுக்குப்பின் 85 விழுக்காடு பெற்றோர்கள் தங்களது குழந்தைகளின் எதிர்காலம் குறித்து அச்சம் தெரிவித்துள்ளனர்.

Survey
Survey

By

Published : Jun 12, 2020, 12:35 PM IST

நாடு முழுவதும் கரோனா தாக்கம் சுகாதாரம், பொருளாதார பாதிப்புகளைத் தாண்டி வேறு பல தாக்கங்களையும் ஏற்படுத்திவருகிறது. பொதுமுடக்கம் அறிவிப்புக்குப் பின் அதில் பல்வேறு தளர்வுகள் தற்போது மெள்ள மெள்ள கொண்டுவரப்படுகின்றன.

அதேவேளை, கல்வி நிலையங்கள் திறப்பது தொடர்பாகத் தொடர்ச்சியான குழப்பம் நிலவிவருகிறது. இந்தச் சூழல் மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து தனியார் ஆய்வு நிறுவனம் ஒன்று இந்தியாவில் உள்ள பள்ளி மாணவர்களின் பெற்றோர்களின் மனநிலை குறித்து ஆய்வறிக்கை ஒன்றை மேற்கொண்டது. அதில் 70 விழுக்காடு பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளின் சுகாதாரம், பாதுகாப்பு குறித்தும், 40 விழுக்காடு பெற்றோர் அவர்களின் கல்வி நிலை குறித்தும் பெரும் கவலையடைந்துள்ளனர்.

அதேவேளை, இந்தச் சிக்கலான சூழலைச் சமாளிக்கும்விதமாக தங்களது பிள்ளைகளுக்கு வீட்டிலிருந்தே கல்வி கற்கும் வசதிகளை மேற்கொள்ள விருப்பம் தெரிவித்து 70 விழுக்காடு பெற்றோரும், ஆன்லைன் வழி வகுப்புகளை மேற்கொள்ள வேண்டும் என 60 விழுக்காடு பெற்றோரும் கோரிக்கைவைத்துள்ளனர்.

இந்தியாவில் கரோனா பெருந்தொற்று பரவலுக்குப்பின் 85 விழுக்காடு பெற்றோர்கள் தங்களது குழந்தைகளின் எதிர்காலம் குறித்து அச்சம் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:பாகிஸ்தான் வாழ்க கோஷம் எழுப்பிய மாணவிக்கு கிடைத்தது பிணை

ABOUT THE AUTHOR

...view details