மும்பை: மகாராஷ்டிர மாநிலம் சந்திராபூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 83 வயது ஹோமியோபதி மருத்துவர் ராமச்சந்திர தனகர். இவர் கடந்த 60 ஆண்டுகளாக அப்பகுதி மக்களுக்கு மருத்துவம் பார்த்துவருகிறார்.
மருத்துவமனைக்கு வர இயலாத நோயாளிகளுக்காகத் தன்னுடைய வெற்றுக் கால்களுடன் மிதிவண்டியில் நாள்தோறும் 10 கி.மீ. தொலைவில் பயணம் செய்து மருத்துவம் பார்த்துவருகிறார். கரோனா காலத்திலும், தன்னுடைய மருத்துவச் சேவை தடைபடக் கூடாது என்றெண்ணி, மருத்துவச் சேவைக்கு விடுப்பளிக்காமல் தொடர்கிறார் என்று பெருமிதம் தெரிவிக்கின்றனர் அப்பகுதி மக்கள்.
மக்களின் தேவையை உணர்ந்து, இந்தக் கரோனா சூழலில் நாள்தோறும் மிதிவண்டியில் பயணம்செய்துதேவையான மருந்துப் பொட்டலங்களை விநியோகித்துவருகிறார்.