இதுதொடர்பாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சக இணைச் செயலாளர் லாவ் அகர்வால் கூறுகையில், "உலகளவில் நடத்தப்பட்ட ஆய்வில் கோவிட்-19 நோய்ப் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட 80% நோயாளிகளுக்கு அறிகுறிகள் குறைந்தளவில் தென்பட்டதாகவும் பலருக்கு நோய் அறிகுறியே தென்படவில்லை என்றும் தெரிய வந்துள்ளது.
மேலும், சுமார் 15 விழுக்காட்டு நோயாளிகள் கடும் பாதிப்புக்குள்ளாவதாகவும், 5 விழுக்காடு பேர் உயிருக்கு ஆபத்தான நிலைக்குத் தள்ளப்படுவதாகவும் ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன" என்றார்.
இதனிடையே, நூற்றில் 80 பேருக்கு நோய் அறிகுறிகள் தென்படவில்லை என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தொற்றுநோய் துறைத் தலைவர் ராமன் கங்காகேத்கர் எச்சரித்துள்ளார்.