இந்தியாவில் கோவிட்-19 தொற்றின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. கரோனாவைக் கட்டுப்படுத்த அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. இருப்பினும், வைரஸ் (தீநுண்மி) பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்படவில்லை.
இந்நிலையில், தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்திலுள்ள சர்தார் வல்லபாய் படேல் தேசிய காவல் அகாதமியில் நிர்வாக மற்றும் பராமரிப்புத் துறைகளில் பணிபுரியும் 80 ஊழியர்களுக்கு கோவிட்-19 தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
தற்போது கரோனா உறுதிசெய்யப்பட்ட ஊழியர்கள் யாரும் பயிற்சி அளிக்கும் பணிகளில் ஈடுபடவில்லை என்று அகாதமியின் மூத்த அலுவலர் ஒருவர் தெரிவித்தார். இதன் காரணமாக தேசிய காவல் அகாதமி தற்போது மூடப்பட்டுள்ளது, வெளியாள்களுக்கு அனுமதியில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.