தமிழ்நாடு

tamil nadu

ஜூலை 26இல் 8 மண்டலங்களை இணைக்கும் விமான சேவை...!

By

Published : Jul 21, 2019, 11:28 AM IST

டெல்லி: உதான் திட்டத்தின் கீழ் எட்டு மண்டலங்களை இணைக்கும் விமான சேவை ஜூலை 26,27ஆம் தேதிகளில் தொடங்கும் என விமான போக்குவரத்துத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

udan scheme

உள்நாட்டு விமான போக்குவரத்தை ஊக்குவிக்கும் வகையிலும், மக்கள் மலிவு விலையில் விமான போக்குவரத்தை பயன்படுத்தும் வகையிலும் விமான போக்குவரத்துத் துறை 2016 அக்டோபர் 21ஆம் தேதி 'உதான்' திட்டத்தை தொடங்கியது.

இந்தத் திட்டத்தின் நோக்கம் உள்நாட்டு விமான சேவையை ஊக்குவிப்பதாகும். நாட்டில் உள்ள அனைத்து மண்டலங்களுக்கும் விமான சேவையை அளிப்பதாகும். இந்தத் திட்டத்தின் கீழ் 705 புதிய வழிகளை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தற்போது இதில் முதல்கட்டமாக மைசூரு-ஹைதராபாத், ஹைதராபாத்-மைசூரு, கோவா-மைசூரு, மைசூரு-கோவா, கொச்சின்-மைசூரு, மைசூரு-கொச்சின், கொல்கத்தா-ஷில்லாங், ஷில்லாங்-கொல்கத்தா ஆகிய வழித்தடங்களில் விமான சேவை தொடங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details