தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'அனைத்து மாநிலங்களுக்கும் 8 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியம் அனுப்பிவைப்பு'

சுயசார்பு இந்தியா தொகுப்புத் திட்டத்தின் மூலம் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கும் 8 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக உணவு மற்றும் பொது வழங்கல் துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் தெரிவித்துள்ளார்.

By

Published : May 30, 2020, 10:30 AM IST

8-dot-00-lmt-food-grains-have-been-allocated-to-the-states-slash-uts-under-self-reliant-india-package-paswan
8-dot-00-lmt-food-grains-have-been-allocated-to-the-states-slash-uts-under-self-reliant-india-package-paswan

கரோனா வைரஸ் (தீநுண்மி) காலக்கட்டத்தில் மத்திய அரசு சார்பாக மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ள உணவு தானியங்கள் பற்றி மண்டல அளவிலான இயக்குநர்களுடன் மத்திய உணவு மற்றும் பொது வழங்கல் துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ராம்விலாஸ் பாஸ்வான் பேசுகையில், ''சுயசார்பு இந்தியா தொகுப்புத் திட்டத்தின்கீழ் மத்திய உணவு மற்றும் பொது வழங்கல் துறை சார்பாக மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு எட்டு லட்சம் மெட்ரிக் டன் (எல்.எம்.டி.) உணவு தானியங்கள் அண்மையில் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

மத்திய உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர்கள் மாநிலங்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். பிரதமர் உணவுப் பாதுகாப்புத் திட்டம் சார்பில் ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மூன்று மாதங்களுக்கும் சேர்த்து 120.04 எல்.எம்.டி. தானியங்கள் அனைத்து மாநிலங்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. மே 27ஆம் தேதி வரையில் 95.80 எல்.எம்.டி. உணவு தானியங்கள் மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

இந்தத் திட்டத்தின்படி 81 கோடி மக்களுக்கு தலா ஐந்து கிலோ அரிசி அல்லது கோதுமை, ஒரு கிலோ பருப்பு ஆகியவை இலவசமாக வழங்கப்பட்டுள்ளன. அதில் 100 லட்சம் டன் (எல்.டி.) உணவு தானியங்கள் ரயில் மூலமாகவும், 12 எல்.டி. உணவு தானியங்கள் சாலை வழியாகவும், 12 ஆயிரம் டன் உணவு தானியங்கள் 12 கப்பல்கள் வழியாகவும் மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

வடகிழக்கு மாநிலங்களுக்கு 9.61 எல்.எம்.டி. உணவு தானியங்கள் அனுப்பப்பட்டுள்ளன. மத்திய அரசின் கையிருப்பில் 751.69 எல்.எம்.டி. உணவு தானியங்கள் உள்ளன. அதில் 479.40 எல்.எம்.டி. கோதுமையும், 272.29 எல்.எம்.டி. அரிசியும் அடங்கும்.

ஏழைகளுக்கும் குடிபெயர் தொழிலாளர்களுக்கும் உணவு கிடைக்கும் வகையில் 24 மணி நேரமும் உணவு மற்றும் பொது வழங்கல் துறை செயல்பட்டுவருகிறது'' என்றார்.

இதையும் படிங்க:அனைத்து புலம்பெயர்ந்த தொழிலாளர்களும் வீடு செல்லும் வரை நாங்கள் கடுமையாக உழைப்போம்- மத்திய அரசு

ABOUT THE AUTHOR

...view details